விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

மலிபன் பிஸ்கட்ஸ் 70 ஆம் ஆண்டின் நிறைவில் ஏற்பாடு செய்யட்டுள்ள “குணநலனும் கலைநயமும்” சித்திரப்போட்டிக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

  1. ஏற்பாட்டாளர்

இப்போட்டியை Maliban Biscuit Manufactories (Pvt) Limited நிறுவனம் எற்பாடு செய்துள்ளது. இது 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க இலங்கை நிறுவனங்களின் சட்டத்தின் கீழ் முறையாக இணைக்கப்பட்டது மற்றும் அதன் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் “388, காலி வீதி, இரத்மலானை” இல் உள்ளது.

  1. தகுதி

இப்போட்டியில் இலங்கைப் பிரஜைகளான 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பங்கேற்றலாம். தேவைப்படுமாயின் பங்கேற்பாளரின் வயதை உறுதிப்படுத்தும் ஆவணத்தை சமர்ப்பித்தல் வேண்டும்.

3. சமர்ப்பிக்கப்படும் காலம் 

அனைத்து ஆக்கங்களும் 2024 அக்டோபர் 1ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரை சமர்ப்பிக்கப்பட வேண்டும் (அக்டோபர் 1ஆம் மற்றும் டிசம்பர் 31ஆம் திகதிகளும் உள்ளடங்கும்)


4. வரைதலுக்கான வரைமுறை

பங்கேற்பாளர்கள் பின்வரும் கலப்பொருட்களை பயன்படுத்தலாம்: கிரேயான்கள், நிறப்பென்கள், மார்க்கர்கள், நீர்வண்ணங்கள் மற்றும் போஸ்டர் நிறங்கள். கணினியால் உருவாக்கப்பட்ட ஓவியங்கள் ஏற்கப்படமாட்டாது.

  1. பிரச்சாரத்திற்கான தளங்கள்

இப்போட்டி பல்வேறு ஊடகங்கள் ஊடக பிரிச்சரம் செய்யப்பட்டுள்ளது. பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி, இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்கள் (Meta, Facebook, Instagram)

  1. ஆக்கத்தை சமர்ப்பிக்கும் முறை

பங்கேற்பாளர்கள் தங்கள் படைப்புகளை பின்வரும் வழிகளில் ஒன்றின் மூலம் சமர்ப்பிக்கலாம்:

  • அஞ்சல்: உங்கள் ஓவியத்தை P.O. Box 389, காலி வீதி, ரத்மலான, இலங்கை என்ற முகவரிக்கு அனுப்பவும்.
  • இணையதளம்: https://malibanrasasiththam.com/ என்ற முகவரியில் உங்கள் உயர்தரமான புகைப்படம் அல்லது ஸ்கேனை பதிவேற்றவும்.
  • வாட்ஸ்ஆப்: 072 441 0077 என்ற எண்ணுக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பவும்.

GET IN TOUCH

GET IN TOUCH

© 2024 Maliban Biscuit Manufactories (Pvt) Limited
Website designed and developed by Artslab Creatives